தமிழ்நாடு

அரசு பேருந்துகளில் பெண்களுக்கு பயணச்சீட்டு – இன்று முதல் வழங்கல்!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இன்று முதல் பெண்களுக்கான கட்டணமில்லா இலவச பயணச்சீட்டு போக்குவரத்து துறை சார்பில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவுகளிலும் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக பயணச்சீட்டு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரம் பெற்றது. தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வெற்றி பெற்றால் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது . அதன் படி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக 5 வாக்குறுதிகளை முக ஸ்டாலின் திட்டமாக செயல்படுத்தினார். அதனை தொடர்ந்து அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை நடைமுறைபடுத்தினார். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து திருநங்கைகளும் இலவச பயணத்திற்கு தங்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று முதல்வர் திருநங்கைகளும் அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்து அரசாணை வெளியிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள், அவைகளின் உதவியாளர்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் அறிவித்தார். இவர்களுக்கான கட்டணமில்லா பயணச்சீட்டு அச்சிடப்பட்டு, கடந்த 21 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயணச்சீட்டை பெற்றுக் கொண்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக அரசு நகரப் பேருந்துகளில் எவ்வித கட்டணமும் இல்லாமல் பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

அதே போல் பெண்களுக்கும் இன்று முதல் அரசு நகர பேருந்துகளில் பயணம் செய்ய கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் பெண்களுக்கு பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு பிரிவுகளிலும் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக பயணச்சீட்டு வழங்கப்படுவதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: