தமிழ்நாடு

திருப்பதி கோவிலில் தரிசனத்திற்காக டிக்கெட் – புதிய அறிவிப்பு வெளியீடு!!

ஆன்லைன் மூலமாக திருப்பதி செல்ல டிக்கெட் புக் செய்து விட்டு கோவிலில் தரிசனம் மேற்கொள்ள முடியாதவர்கள் தங்களது வசதிக்கு ஏற்றாற்போல தேதியினை மாற்றி விட்டு தரிசனம் மேற்கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் மிக புகழ் பெற்ற கோவிலாக பார்க்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்த ஆண்டு கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டு கோவில் மூடப்பட்டது. அதற்கு பின்பாக அந்த மாநில அரசு தளர்வுகளை அளித்ததும், ஆன்லைன் மூலமாக டிக்கெட்டுகளை புக் செய்த பிறகு தான் தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டது.

இப்படியாக இருக்க திருப்பதியில் சாமியை தரிசனம் செய்ய ரூ.300 ஆன்லைன் முன்பதிவு டிக்கெட், விஐபி தரிசனம் உள்ள வசதிகளை அந்த கோவிலின் தேவஸ்தானம் ஏற்படுத்தியது. இணையத்தில் பக்தர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. டிக்கெட் செய்து விட்டு வருபவர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்து இருந்தது.

இப்படியாக இருக்க, ஏற்கனவே டிக்கெட் புக் செய்து விட்டு புக் செய்த நாளில் போக இயலவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆர்ஜித சேவை மூலமாக டிக்கெட் புக் செய்த பக்தர்கள் தங்களது தேவையான நேரம் மற்றும் தேதியில் மாற்றி கொண்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: