தமிழ்நாடுமாவட்டம்

மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞர்கள்.. 3 பேர் பலி.. 8 பேர் படுகாயம்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, மதுபோதையில் இருந்த 4 இளைஞர்கள், சொகுசு காரை தாறுமாறாக ஓட்டிச் சென்று, சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.

திருமுருகன்பூண்டி பகுதியில் அவிநாசியில் இருந்து திருப்பூர் நோக்கி, சொகுசு கார் ஒன்று மின்னல் வேகத்தில் சென்றது. மதுபோதையில் இருந்த நான்கு இளைஞர்கள், காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது மோதியதுடன், அப்பகுதியில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பயணிகள் மீதும் மோதியது.

மேலும், நிற்காமல் சென்ற கார், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்கள் மீதும் மோதி சேதத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 8 பேர், சிகிச்சைக்‍காக மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.

காரின் உள்ளே மதுபோதையில் இருந்த இளைஞர்களை, அப்பகுதியினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:  உங்க கால்களில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை அகற்றனுமா? இதில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: