சினிமாபொழுதுபோக்கு

ஒரே நாளில் மூன்று மில்லியன் லைக்ஸ் – ‘மாஸ்டர்’ சாதனையை முறியடித்த கேஜிஎப் 2 டீசர்!

கே.ஜி.எப்-2 படத்தின் டீசர் மாஸ்டர் படத்தின் டீசரை காட்டிலும் அதிக லைக்ஸ் பெற்று புதிய சாதனை பெற்றுள்ளது. மேலும் டீசர் வெளியிடப்பட்ட 16 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மூன்று மில்லியன் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.

கே.ஜி.எப் சாதனை

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 2018 ம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எப். கன்னடத்தில் வெளியான ஆக்க்ஷன் ட்ராமாவான இத்திரைப்படம் பல மொழியை சேர்ந்த ரசிகர்களை சம்பாதித்தது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 100 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து இப்படத்தின் டீஸர் நடிகர் யஷ் ன் பிறந்தநாளில் (ஜனவரி 8) வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் நேற்று இரவு இணையதளத்தில் வெளியானது.

ட்விட்டரிலும் ட்ரெண்டிங்

இந்த படத்தின் டீஸரை ரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் டீஸர் வெளியான 16 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அதிகம் விரும்பப்பட்ட பதிவாக 3 மில்லியன் லைக்ஸ்களை குவித்திருக்கிறது. மேலும் இதுவரை டீஸர் வெளியான நாளில் அதிகம் லைக்ஸ்களை பெற்ற முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனைக்கு சொந்தமாக மாறியிருக்கிறது.

maxresdefault 1

இதற்கு முன்பு மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியான போது 1 மில்லியன் 85 லைக்குகள் வந்ததே சாதனையாக இருந்தது. மேலும் நடிகர் விஜய்யின் மெர்சல், சர்க்கார் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டீசர் வெளியானபோது முதல் நாள் பெற்ற லைக்குகளின் சாதனையை முறியடித்துள்ளது. இதனால் கே.ஜி.எப் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

Back to top button
error: Content is protected !!