தமிழ்நாடுமாவட்டம்

சிதம்பரம் அருகே பஸ், லாரி மோதி கோர விபத்து.. 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

சிதம்பரம் அருகே அரசு சொகுசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேர் பரிதாபமாக உயரிழந்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து சென்னை செல்லும் அரசு போக்குவரத்து கழக சொகுசுப் பேருந்து நேற்று ( ஏப் 8 ) இரவு புறப்பட்து. நள்ளிரவு 2 மணியளவில், சிதம்பரத்தை அடுத்த மேட்டுப்பாளையம் அருகே சென்றுபோது, கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த மீன் லாரியுடன் மோதியது.

 

 

இந்த விபத்தில், திருப்பாலபந்தலைச் சேர்ந்த ஓட்டுநர் சிவக்குமார், (42) நாகையைச் சேர்ந்த பயணிகள் அன்பரசன் (34), வைரவன் (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயை உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.

202104081109012619 1 busdriver. L styvpf

தகவலறிந்து சம்பவ இடத்தற்கு விரைந்த புதுச்சத்திரம் காவல் துறையினர், உயிரிழந்தோரின் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காயம் அடைந்த பயணிகள் கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: