ஆன்மீகம்இந்தியா

சபரிமலையில் இன்று மகரஜோதியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் நடைபெற்ற மகர விளக்கு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மகர ஜோதியை தரிசனம் செய்தனர்.

மகரவிளக்கு  பூஜைகளுக்காக  சபரிமலை  ஐயப்பன் கோயில் நடை கடந்த டிசம்பர் 30ம் தேதி மாலை  திறக்கப்பட்டது. மறுநாள் முதல் மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வந்தன.

பொங்கல் பண்டிகையான இன்று  மகரஜோதியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

பக்தர்கள் வருகையையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சன்னிதானம் முதல் பம்பை வரை போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்.

மகரவிளக்கு பூஜையையொட்டி சுவாமி ஐயப்பனுக்கு   அணிவிக்கப்படும் திருவாபரணம் பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டுமாலை ஆறரை மணியளவில் சன்னிதானத்தை வந்தடைந்தது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: