ஆரோக்கியம்

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களா? அப்போ மிஸ் பண்ணாம படிங்க!!

மனிதர்களுக்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். ஆனால் இந்த காலத்தில் பலரும் அதை தொலைத்து விட்டு வாழ்ந்து வருகின்றனர். படுத்தவுடனே தூக்கம் வர என்னென்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

தூக்கம்:

இந்த காலத்தில் ட்ரெண்டிங் என்று பலரும் புதுவிதமாக பல செயல்களை செய்துகொண்டுள்ளார். அன்றாட செயலில் இருந்து சாப்பாடு வரை பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. துரித உணவுகளையே மக்கள் விருப்பி சாப்பிட ஆரம்பித்து விட்டனர். வேகமாக சமைக்கும் உணவுகள் அனைத்தும் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடாது தான். அதே நேரம் இரவு நேரத்தில் தான் தற்போது அதிக உணவுகளை நாம் எடுத்து கொள்கிறோம். இதனால் கண்டிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைய தான் செய்யும்.

chinese foods
பானி பூரி, க்ரில் சிக்கன் என அதிகளவு மக்கள் கெடுதலான விஷயங்களையே சாப்பிட்டு வருகின்றனர். மேலும் ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியம். ஆனால் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தானே தூக்கம் ஒழுங்காக வரும். மேலும் செல் போனை இரவு முழுவதும் பார்த்துக்கொண்டே இருப்பதால் வரும் தூக்கமும் பாதியிலேயே போய்விடுகிறது. 11 மணிக்கு மேல் தான் கணையம் உடலில் சுத்தம் செய்ய ஆரம்பிக்கும். அதற்குள் தூங்கவில்லை என்றால் உடலில் உபாதைகள் ஏற்படும். மேலும் மந்தத்தன்மை ஏற்படுவதற்கும் இதுவே காரணம். எனவே

  • இரவில் நன்றாக தூக்கம் வரவேண்டுமெனில் தூங்க செல்வதற்கு 1 மணிநேரத்திற்கு முன்பு வரை டிவியோ அல்லது மொபைலையோ பார்க்க கூடாது.
  • இரவு நேரத்தில் குளிர்ந்த உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
  • வெள்ளரிக்காயை தப்பித்தவறி கூட இரவு நேரத்தில் சாப்பிட கூடாது.
  • தூங்க செல்லும் முன் பாலில் வெள்ளைப்பூடு சேர்த்து குடித்தால் படுத்த உடனே தூக்கம் வரும்.
  • தூங்க செல்வதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பாகவே சாப்பிட்டு முடிக்க வேண்டும். மேலும் தூங்க செல்லும்போது அதிகளவு நீர் ஆகாரங்களை குடிப்பதால் கூட தூக்கம் கேட்டு போக வாய்ப்புள்ளது.இதையெல்லாம் பின்பற்றி வந்தால் கண்டிப்பாக இரவு துக்கத்தை நிம்மதியாக பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: