தமிழ்நாடு

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்!!

தமிழகத்தில் குரோம்பேட்டையில் உள்ள மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழக தொழில்‌ நுட்பப்‌ பயிலக கல்லூரியில் (ஐடிஐ) காலியிடங்களுக்கு 10ம் வகுப்பு முடித்தவர்கள் ஆகஸ்ட் 30 வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி இயக்குநர்‌ அன்பு ஆபிரகாம்‌ தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் அனைத்து படிப்புகளுக்கும் 2021-2022ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்லூரிகளிலும் இணையதளம் வாயிலாக பணிகள் நடைபெறுகிறது. கடந்த ஜூலை 26 முதல் அரசு மற்றும் தனியார் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்த நிலையில் விரைவில் சேர்க்கை பணிகள் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மற்ற கல்லூரிகளை தொடர்ந்து தற்போது சென்னை குரோம்பேட்டையில் உள்ள தொழில்‌ நுட்பப்‌ பயிலகக்‌ கல்லூரியில் 2021ஆம்‌ கல்வியாண்டில் பணியாளர்களின்‌ வாரிசுகள்‌ போக மீதமுள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இக்கல்லூரி மத்திய அரசின்‌ அங்கீகாரம்‌ பெற்று செயல்பட்டு வருகிறது. மேலும் அனுபவம்‌ வாய்ந்த பயிற்சி வல்லுநர்கள்‌ மூலம்‌ சிறந்த முறையில்‌ பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஐடிஐ இரண்டு ஆண்டு கால படிப்பில் சேருவதற்கு mtcbus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகத்‌ தொழிற்‌பயிற்சி நிலைய வளாகத்தில் நேரடியாக பெற்று கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தொழில்‌ நுட்பப்‌ பயிலக கல்லூரி இயக்குநர்‌ அன்பு ஆபிரகாம்‌ தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  குணமடைந்து வரும் கமல்ஹாசன்; மருத்துவமனை அறிக்கை!
Back to top button
error: