ஆரோக்கியம்

தொப்பையை குறைக்க உதவும் இந்த அருமையான பானம்..!

உடல் பருமன் ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக பலரும் தொப்பையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது உடல் அழகையும் கெடுகிறது. அதிலும் அடிவயிற்று கொழுப்பை கரைக்க பெண்கள் பெரும்பாடு படுவார்கள். அவர்களுக்காக இயற்கை பானங்கள் மூலம் எளிதில் தொப்பையை குறைக்க இந்த பதிவு உதவியாக இருக்கும். தொப்பையை குறைக்க இளநீர் பானம் முதலிடத்தில் உள்ளது. இவை இரத்தம் உறைவதை தடுத்து சீரான உடல் எடையை தருகிறது.

தேவையானவை:

இளநீர் – 1 கப்,
அன்னாசிப்பழம் – 1/2 கப்,
கருஞ்சீரக விதைகள் – 1/2 ஸ்பூன்,
உப்பு – சிறிதளவு

செய்முறை:

முதலில் அன்னாசிப்பழத்தை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் இளநீர், கருஞ்சீரகம் சேர்த்து மீண்டும் ஒருமுறை கூட நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இதனை வடிகட்டி
எடுக்க வேண்டும்.

இந்த வடிகட்டி எடுத்த பானத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் குடித்து வாருங்கள். இப்படி தொடர்ந்து செய்வதால் உடலில் உள்ள கொழுப்புகள் நீங்கி, உடல் பருமன் குறைந்து விடும். அடி வயிறு கொழுப்பு கரைந்து, வயிறு நல்ல அமைப்புடன் காணப்படும்.

மேலும், தினமும் ஏதேனும் ஒரு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்தால் கூடுதல் பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: