ஆரோக்கியம்

தொப்பையை குறைக்கும் இந்த ஜூஸ்?

மாறிவரும் உணவு பழக்கவழக்கம் மற்றும் அதிக உடல் உழைப்பு இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் இன்று இளவயதினர் முதல் அனைத்து தரப்பு வயதினர்களும் தொப்பையால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

அதையடுத்து, உடல் தொப்பையை குறைக்க நாள்தோறும் உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி போன்றவற்றை செய்து வருகிறார்கள். இந்நிலையில், தொப்பையை குறைப்பதற்கு உதவும் ஜூஸ் வகைகள் குறித்து பார்க்கலாம்.

தொப்பை எதனால் வருகிறது

அலுவலகத்தில் ஆண்கள் உட்கார்ந்தவாறே வேலை செய்வதால் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் கொழுப்புக்களாக மாறி உடலில் தங்கி உடல்பருமனை உருவாக்குகிறது.

பணிச்சுமை அதிகமாக இருப்பதால் பல ஆண்கள் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர். அதிக மன அழுத்தம் காரணமாக, உடல் ஹார்மோன்களில் ஏற்படுகிற மாற்றங்கள் உடல்பருமனுக்கு வழி வகுக்கிறது.

நொறுக்குத் தீனி அதிகம் சாப்பிடுவதாலும் ஆண்களுக்கு தொப்பை வருகிறது.

டி.வி. பார்க்கும் பொழுது எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பதாலும் ஆண்களுக்கு தொப்பை ஏற்படுகிறது.

நண்பர்களுடன் பார்ட்டிகளில் அதிகம் கலந்து கொள்ளும் போது, மது அருந்துவதுடன், அசைவ உணவுகளை அதிகம் எடுத்து கொள்வதால் உடல் பருமன் ஏற்படுகிறது.

ஆண்களில் ஒரு சிலருக்கு அடிக்கடி அல்லது தினமும் மது அருந்தும் பழக்கமும் இருப்பதால் அவர்களுக்கு விரைவில் தொப்பை ஏற்படுகிறது.

வீட்டில் தினந்தோறும் வீட்டு வேலைகளை செய்துவரும் பெண்கள், அன்றாடம் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்வதுடன், தண்ணீர் பிடிப்பதற்காக குடங்களை சுமந்து வருவதால் உடல் தொப்பையானது பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதில்லை. ஆண்களுக்கு மட்டும் தான் பெரும்பாலும் வருகிறது.

என்ன செய்தால் குறையும்

தொப்பையை குறைக்க, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன், சிறிது உப்பு சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைத்து, நாளடைவில் தொப்பை மறைந்துவிடும்.

தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிள் பயிற்சி மற்றும் நீச்சல் போன்றவற்றை செய்து வந்தாலும் உடலில் ஏற்பட்ட தொப்பையை குறைக்கலாம்.

என்ன ஜூஸ் குடிப்பது

தொப்பை அதிகமாக இருப்பவர்கள் கீழ்க்கண்ட ஜூஸ் வகைகளை தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வரும்.

தேவையான பொருட்கள் :

எலுமிச்சை – 5

புதினா இலைகள் – 15

வெள்ளரிக்காய் – 1

துருவிய இஞ்சி – 2 ஸ்பூன்

தண்ணீர் – 2.5 லிட்டர்

செய்முறை :

வெள்ளரிக்காய் மற்றும் 2 எலுமிச்சையை வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். மீதியிருக்கும் 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் நறுக்கிய புதினா, 1.5 லிட்டர் நீர் ஊற்றி கிளறி விட வேண்டும்.

இதையும் படிங்க:  கத்தரிக்காய் உடல் பருமனைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது

அதன் பின் அதில், இஞ்சி மற்றும் சிறிதளவு தண்ணீரை ஊற்றி, அதனுடன் வெட்டி வைத்த வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்றாக கிளறி, ஒரு நாள் முழுவதும் ஊற வைத்தால், தொப்பையை குறைக்கும் ஜூஸ் தயார்.

இந்த ஜூஸை ஒவ்வொரு நாளும் செய்து தொடர்ந்து 3 நாட்கள் குடித்து வந்தால் தொப்பை குறைவதைக் காணலாம்.

அருகம்புல் ஜூஸ்

அருகம்புல்லை ஒரு கைப்பிடி அளவு பறித்து, அவற்றை சுத்தமாக கழுவி மிக்சியில் அரைத்து சாறை வடிகட்டி கொள்ளவும்.

பின்பு பசும்பாலை காய்ச்சாமல் ஒரு டம்ளர் எடுத்து கொண்டு, அவற்றில் இந்த அருகம்புல் சாறை கலந்து குடிக்க வேண்டும்.

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இந்த பானத்தை தினமும் பருகி வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ளலாம்.

கொள்ளு ஜூஸ்

தினமும் அதிகாலை எழுந்தவுடன் ஒரு கையளவு கொள்ளுப்பயறை எடுத்து, அவற்றை ஒரு கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும், பின்பு அவற்றில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.

நன்றாக கொதித்து ஆறியதும் அவற்றை வடிகட்டி அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அளவு பருக வேண்டும்.

இந்த பானத்தை தினமும் காலை எழுந்தவுடன் பல் துலக்கியதும் வெறும் வயிற்றில் பருகி வர விரைவில் தொப்பை குறையும்.

காய்கறி ஜூஸ்

உடல் எடையை வேகமாக குறைக்க நினைப்பவர்கள், 2 மாதங்களுக்கு தினமும் இரவில் காய்கறி ஜூஸ் செய்து குடித்து வர உடலில் கொழுப்புக்கள் சேராமல் கட்டுப்படுத்தப்படும்.

முருங்கை கீரை ஜூஸ்

முருங்கை கீரையில் அதிக இரும்பு சத்து இருப்பதால், தினமும் இதை ஜூஸ் தயாரித்து பருகிவர, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து விடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: