ஆரோக்கியம்

மகிழ்ச்சியின் ரகசியம் இதுதான்!

மனிதனின் மகிழ்ச்சி

ஒவ்வொரு மனிதனின் மகிழ்ச்சியும் பொருள் ரீதியானது அல்ல, அவன் தனக்குப் பிடித்த வகையில் செலவழிக்கும் மதிப்புமிக்க நேரமே ஆகும்.

நினைத்ததை அடைய நினைக்கும் எண்ணம்

நாம் செல்போனோ, பைக்கோ, வீடோ அல்லது பிடித்த பொருள் ஒன்றையோ வாங்க வேண்டும் என்று மனது தவியாய்த் தவிப்பது ஏன்? அப்படி ஆசைப்பட்ட பொருள் வாங்கிய பிறகு மனதில் ஏன் அத்தனை சந்தோஷம் பொங்குகிறது? இதன் உளவியல்தான் என்ன?

சந்தோஷத்தை விரும்பக் கூடியது. இதனை ஆங்கிலத்தில் Instant Gratitude என்கிறார்கள். மகிழ்ச்சி தரக்கூடிய வார்த்தைகளை காதால் கேட்டாலும், தனக்கு ஒன்று வேண்டும் என்றாலும் அது உடனே நடந்தாக வேண்டும் என்று அடம் பிடிக்கக் கூடியது மனம். நமக்குள் இருக்கும் இந்த உடனடி மகிழ்ச்சிக்கான ஆசை உயிர் இயக்கத்திலேயே அமையப் பெற்றுள்ளது.

இந்த உற்சாக உணர்வானது, உண்மையில் நீங்கள் வாங்கும் பொருளை விட வலுவான பிரதிபலிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. உயிரியல் ரீதியாக பார்த்தால் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் காரணியாக செயல்படும் டோபமைன் ( Dopamine) என்னும் ரசாயனமே அந்த உடனடி மகிழ்ச்சிக்குக் காரணம். இந்த டோபமைன் அளவு குறையத் தொடங்கும்போது வேறொன்றின் மீது ஆசை பிறக்கும். அதுதான் மனித மனத்தின் இயல்பு.

இதுவே விரும்பிய பொருள் கிடைத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அல்லது சில மாதங்களுக்குப் பிறகு சற்றே அதன்மீதான உற்சாகம் குறைந்திருக்கும். அதற்கும் டோபமைன் ( Dopamine) சுரப்பு குறைவதே காரணம்.

பணம் கொண்டு பிடித்த பொருட்களை வாங்கும்பொழுது நமக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் அம்மகிழ்ச்சியை விட நேரத்தை தங்களுக்கு பிடித்த வகையில் செலவழிப்பவர்களே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அவர்களுக்கே டோபமைன் ( Dopamine) அளவு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் சில கூறுகின்றன.

அதாவது பணம், பொருட்களினால் வரும் மகிழ்ச்சியைவிட பிடித்த செயல்களில் ஈடுபடும்போது கிடைக்கும் மகிழ்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. உங்களுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபடுவதற்காக நேரத்தை ஒதுக்குவதில் கவனம் செலுத்தினாலே போதும். 100 சதவீத மகிழ்ச்சியை நிச்சயம் அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: