சினிமாபொழுதுபோக்கு

‘எல்லாருக்கும் கண்டிப்பாக இது மாஸ்டர் பொங்கல் தான்’ – நடிகர் சூரி உற்சாகம்!

திரையரங்குகளில் இன்று வெளியான மாஸ்டர் திரைப்படத்தை மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் பார்த்து ரசித்த நகைச்சுவை நடிகர் சூரி இது கண்டிப்பாக மாஸ்டர் பொங்கல் தான் என்றும் படம் சூப்பர் என்றும் கூறியுள்ளார்.

நடிகர் சூரி பாராட்டு

பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் குறித்து நகைச்சுவை நடிகர் படம் சூப்பர் என்று பாரட்டலை தெரிவித்துள்ளார். இது கண்டிப்பாக ‘மாஸ்டர் பொங்கல் தான்’ என்றும் கூறினார்.

இதை தொடர்ந்து அவர் பேசியபோது, ‘ மாஸ்டர் படத்தை மதுரையில் பார்க்க விரும்பினேன். அதன்படி பார்த்தேன். படம் ரொம்ப நல்லாயிருக்கு. சூப்பர். விஜய் சார் ரசிகர்கள் எல்லாரும் ரொம்ப என்ஜாய் பண்ணி பாத்தாங்க. படம் சூப்பர் தியேட்டரும் சூப்பர். ரசிகர்கள் எல்லாத்துக்கும் கண்டிப்பா இது மாஸ்டர் பொங்கல் தான். காமெடியில் விஜய் சார், விஜய்சேதுபதி சார் ரெண்டுபேரும் கலக்கியிருக்காங்க.

தியேட்டருக்குள்ள 200 பேர் அமர்ந்திருக்க வெளிய 1000 பேர் நின்னுட்டு இருந்தாங்க. இது ஒரு கஷ்டமான சூழல் தான். இருந்தாலும் அரசு சொல்வதை கடைபிடிப்போம். கொரோனா தொற்று பரவக்கூடாது என தியேட்டரில் 50% பார்வையாளர்களை அனுமதித்துள்ளது தமிழக அரசு. கொரோனாவை கடந்து வந்து அதனுடன் வாழ பழகிவிட்டோம். அவ்வளவுதான்’ என்று பேசினார்.

Back to top button
error: Content is protected !!