தமிழ்நாடுமாவட்டம்

‘ஒரு தலைவர் பேசுகிற பேச்சா இது?’ ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் கண்டனம்!

கிராம சபை கூட்டத்தில் இவ்வளவு பெண்கள் இருப்பீங்க என தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாக மேக்கப் போட்டு வந்திருப்பேன் என மு.க.ஸ்டாலின் கூறுவதெல்லாம், ஒரு தலைவர் பேசுகிற பேச்சா என காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற மொழி போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொது கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கடும் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அதிமுக சார்பில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் வணிகர் வீதியில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளரும், காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான கோகுல இந்திரா கலந்துகொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பெருமைப்படுத்தி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கிராம சபை, மக்கள் சபைக் கூட்டத்திற்குச் சென்று அங்கு இருக்கும் பெண்களை பார்த்து, இவ்வளவு பெண்கள் இருப்பீங்க என தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாக மேக்கப் போட்டு வந்திருப்பேன் என கூறுகிறார். இது ஒரு தலைவர் பேசுகிற பேச்சா? இதுதான் நீங்கள் வந்த வழி” என்றார் அவர்

இக்கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ மதனந்தபுரம் பழனி, அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.

Back to top button
error: Content is protected !!