தமிழ்நாடுமாவட்டம்

9 மாதமாக குவைத்தில் சிக்கிய 32 பேர் திருச்சி வந்தனர்..

தமிழ்நாட்டை சேர்ந்த திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், சிவகங்கை, துாத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவுர், கள்ளக்குறிச்சி, தென்காசி, மதுரை, கடலுார் ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த 32 பேர் குவைத்து நாட்டில் சிக்கி தவித்து வந்துள்ளனர். கடந்த 9 மாதங்களாக வேலையிழந்து வருமானமின்றி அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்த மாநில அரசு மத்திய அரசு உதவியுடன் குவைத்தில் உள்ள இந்திய துாதரகத்தை தொடர்பு கொண்டு, அவர்களை தமிழகம் திரும்ப செய்ய முயற்சி எடுக்கப்பட்டது. இதன் விளைவாக அவர்கள் விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர். திருச்சி விமான நிைிலயம் வந்தடைந்த அவர்களுக்கு அரசு செலவில் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல வாகன ஏற்பாடு செய்யப்பட்டதுடன், உணவு குடிநீர் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.

loading...
Back to top button
error: Content is protected !!