ஆரோக்கியம்

இந்த இரு செடிகளே போதும்! சுத்தமான காற்றை சுவாசிக்க..

சுத்தமான காற்றை சுவாசிக்க வீட்டைச் சுற்றிலும் சுத்தமான செடிகள் மற்றும் மரங்களை வளர்க்க வேண்டும். இடம் குறைவாக இருப்பவர்கள் தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம். அதில் முக்கியமாக இந்த இரண்டு செடிகளை தொட்டிகளில் வளர்த்தாலே காற்றின் தரத்தை உயர்த்துவதோடு, ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.

கற்றாழை

சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்குக் கற்றாழை சிறந்த தீர்வை தரவல்லது. காற்று சுத்திகரிப்பிலும் கற்றாழை முக்கியப்பங்கு வகிக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று. இதை வீட்டில் வளர்த்தால் காற்றின் தரம் உயர்வதோடு, சிறந்த மூலிகையாகவும் நமக்கு கைகொடுக்கும். காற்றில் எப்போதும் புத்துணர்ச்சி இருப்பதை உணரலாம்.

புதினா

சமையலிலும், மருத்துவத்திலும் புதினாவின் பங்கு அனைவரும் அறிந்ததே. இதன் இலைகள் மிகவும் மணமுடையவை. இது வேகமாக வளரக்கூடியது. வீட்டில் இதை வளர்ப்பதன் மூலம் காற்றில் நல்லதொரு புத்துணர்ச்சி நீடித்திருக்கும். மேலும், ஈ, எறும்புகள், எலிகள் போன்றவற்றின் தாக்கத்தையும் இது கட்டுப்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: