ஆரோக்கியம்தமிழ்நாடு

ஒரே மாதத்தில் அடர்த்தியான தலைமுடியை பெற வேண்டுமா..? இந்த மூன்று பொருட்கள் போதும்!!

தலை முடி பிரச்சனைகளை தடுக்க நாம் கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவதால் பல விளைவுகளை சந்தித்து வருகிறோம். இயற்கை முறையில் நாம் தலைமுடிகளை பராமரிக்கும் போது கூந்தலுக்கு ஊட்டம் அளித்து முடியின் வேர் வரை வலுப்படுத்தும். இப்பொழுது இயற்கை முறையில் மூன்றே பொருட்களை வைத்து முடி உதிர்வை தடுப்பது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்.

முடி உதிர்வை கட்டுப்படுத்த..

நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியாக கிடைக்காமல் போனாலும் இந்த முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். நாம் என்ன தான் தலை முடிக்கு பல பொருட்களை உபயோகித்தாலும் உடலுக்கு தேவையான ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும். உடல் சூடு இதற்கு முக்கிய காரணம் ஆகும். ஏனெனில் இந்த காலத்தில் ஸ்மார்ட் போன்களின் உபயோகம் அதிகரித்து வருகிறது.

hair loss 1

சிலர் இரவு முழுவதும் செல்போனை பயன்படுத்துவதால் சரியான தூக்கமின்மை ஏற்படுகிறது. இதனாலேயே முடி உதிர்வு ஏற்படலாம். இதற்கு தான் அந்த காலத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை கொண்டு வந்தனர். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு குறையும் முடி உதிர்வும் இருக்காது.

hair oil 1

இப்பொழுது கற்றாழையை தோல் சீவி எடுத்து சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதன் பின் சின்ன வெங்காயத்தை எடுத்து, இந்த இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதனை எடுத்து முட்டை வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

inner11559209907

இப்பொழுது இதனை முடியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து கொள்ளவும். முடியின் வேர் வரை நன்கு தடவ வேண்டும். இதில் தேங்காய் எண்ணெயும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது முடி உதிர்வதை தடுக்கும். மேலும் புதிய முடிகளை வளரச் செய்யும். இதனை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தாலே போதுமானது.

Back to top button
error: Content is protected !!