ஆரோக்கியம்தமிழ்நாடு

கல்லீரல் பாதிப்படைய இவ்வளவு காரணங்கள் இருக்கா? அதை ஆரோக்கியமாக வைத்து கொள்வது எப்படி?

கல்லீரல் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வு சொல்கிறது.

மது அருந்துபவர்கள் மட்டுமே கல்லீரல் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று நினைப்பது தவறு.

பல்வேறு காரணங்களால் கல்லீரல் பாதிப்பை சந்திக்கிறது.

பரம்பரை, வைரஸ், அதிக எடை, சில மருந்துகள், சர்க்கரை அளவு அதிகமாகுதல், எந்தவொரு உடற்பயிற்சியும் செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்தபடியே இருப்பது என பல காரணங்களால் ஆண்-பெண் இருபாலாரும் கல்லீரல் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.

மேலும் ஆல்கஹால், வறுத்த, பொரித்த உணவுகள், அதிக உப்பு, அதிக அசைவம் ஆகியவையும் கல்லீரல் பாதிப்புக்கு காரணமாக அமைகின்றன.

கல்லீரலை ஆரோக்கியமாய் வைத்துக் கொள்வது எப்படி?

அளவான எடை இருக்குமாறு நம்மை காக்க வேண்டும். அதிக எடையினை குறைப்பது கல்லீரலில் உள்ள கொழுப்பினை குறைக்க உதவும்.

விகிதாச்சார உணவு அவசியம். அதிக கலோரி சத்து உள்ள உணவு, அதிக கொழுப்பு, மைதா வகைகள், அதிக பாலிஷ் செய்த அரிசி, சர்க்கரை இவற்றினைத் தவிருங்கள். நார் சத்து மிகுந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள், முழு தானிய உணவுகள், கொட்டைகள், விதைகள் இவைகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

அன்றாடம் உடற்பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் கல்லீரல் கொழுப்பினை குறைக்கும்.

மது, புகை, புகையிலை போன்ற நச்சுப் பொருட்களை அடியோடு தவிர்ப்போம்.

உங்கள் சுகாதாரப் பொருட்களை மற்றவர்களுடன் பங்கு போட வேண்டாம்.
கல்லீரலுக்கான ஏ, பி. வைரஸ் தவிர்க்க நடைபயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். இது அவசியம்.

மது அருந்துபவர்கள், அருந்தாதவர்கள் இருவரும் கொழுப்பு நிறைந்த கல்லீரல் நோய்க்கு தீர்வாக மேலும் சில வழிமுறைகளை பின்பற்றலாம்.

அளவான முறையில் காபி அருந்தலாம். காபியில் உள்ள கேபின் கல்லீரலில் ஏற்படும் முறையற்ற என்ஸைம்கள் அளவினை சரி செய்யும்.

இதையும் படிங்க:  முகத்தில் தோல் உரியுதா? இதனை தடுக்க இதோ சூப்பர் டிப்ஸ்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: