ஆரோக்கியம்

சிரிப்பதால் இத்தனை பயன்களா!

‘வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்’ ​​நாம் காலை முதல் இரவு வரை பரபரப்பான வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் மன அழுத்தம், மன உளைச்சல், பொருளாதார போராட்டம் என பல நெருக்கடிகளை சந்திக்கிறோம். சிரிப்பு தான் பல பிரச்சனைகளுக்கு மருந்தாய் விளங்குகின்றது. ஆனால், நாம் பெரும்பாலான நேரங்களில் சிரிப்பது என்பதையே மறந்து விடுகிறோம். அதையடுத்து, சிரிப்பதனால் ஏற்படும் நன்மைகளை குறித்து பார்ப்போம்.

சிரிப்பின் சிறப்புகள்

‘துன்பம் வரும் வேளையில் சிரிங்க…” என்றார் வள்ளுவர்.

‘சிரித்து வாழ வேண்டும்; பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே” என்றார் பாடலாசிரியர் புலமைபித்தன்.

‘சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி’ என்றார் கவிஞர் கண்ணதாசன்.

சிரிப்பின் வகைகள்

 • அசட்டு சிரிப்பு,
 • ஆணவ சிரிப்பு,
 • ஏளனச் சிரிப்பு,
 • சாகச சிரிப்பு,
 • நையாண்டி சிரிப்பு,
 • புன் சிரிப்பு,
 • மழலை சிரிப்பு,
 • நகைச்சுவை சிரிப்பு,
 • தெய்வீகச் சிரிப்பு,
 • காதல் சிரிப்பு,
 • வில்லங்க சிரிப்பு,
 • ஏழையின் சிரிப்பு.

நன்மைகள்

ஒரு மனிதன் சிரிக்கும்போது அவனுடைய உடலில் பல இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.

உடலின் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இருதயத் துடிப்பு சீராகும்.

இரத்த அழுத்த நோய்கள் உள்ளவர்களுக்கு சிரிப்பு ஒரு சிறந்த மருந்து.

சிரிக்கும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாயு நன்கு உட்சென்று உடலிற்கு புத்துணர்வைத் தரும்.

சிரிப்பதால் மன அழுத்தம், மன இறுக்கம், மன உளைச்சல் குறையும்.

ஜீரண உறுப்புகள் சீராக செயல்பட்டு மலச்சிக்கல் தீரும்.

சிந்தனை செயல் அதிகரிக்க சிரிப்பே சிறந்தது.

சிரிக்கும் போது முகத்தின் தசைகளுக்கு பயிற்சி கிடைக்கிறது. இது முகத்தின் அழகை அதிகரிக்க காரணமாகிறது.

நீண்ட சிரிப்பு, உடலில் உள்ள அதிக கலோரிகளை எரிக்கப் பயன்படுகிறது.

சிரிக்கும் பொழுது உடல் வலியைக் குறைக்கும் ஹார்மோன் உற்பத்தியாகிறது.

ஒருவர் சிரிக்கும் பொழுது உடலில் 300 தசைகள் அசைகின்றன.

ஒரு நாளில் குழந்தைகள் சராசரியாக 400 தடவைகள் சிரிக்கும் போது பெரியவர்கள் 15 தடவைகள் மட்டுமே சிரிக்கிறார்கள்.

தியானம் செய்வதால் கிடைக்கும் சக்தியை விட, சிரிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைகிறது. அதனால்தான், சிரிக்கும் பயிற்சியை குறிப்பிட்ட சில நேரத்திற்கு பலரும் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:  சளியை போக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: