வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு முடித்தவர்களா? இந்திய துணை ராணுவத்தில் காத்திருக்கும் 25271 காலிப்பணியிடங்கள்!!

அசாம் ரைபிள்ஸ் தேர்வில் மத்திய ஆயுத போலீஸ் படைகள் (CAPF), என்ஐஏ, எஸ்எஸ்எஃப் மற்றும் ரைபிள்மேன் ஆகியவற்றில் கான்ஸ்டபிள்களை நியமிப்பதற்காக பணியாளர்கள் தேர்வு ஆணையம், எஸ்எஸ்சி ஜிடி அறிவிப்பு 2021 வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – SSC
பணியின் பெயர் – Constable (General Duty) and Rifleman (General Duty)
பணியிடங்கள் – 25, 271
விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.08.2021
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள்:

இந்த தேர்வின் மூலம் 25, 271 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

கல்வி தகுதி:

கல்வித் தகுதிகளைப் பொறுத்தவரை, விண்ணப்பத்தார்கள் 10 ஆம் வகுப்பு அல்லது மெட்ரிகுலேஷன் தேர்வை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களது தகுதிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆகஸ்ட் 1, 2021 க்குள் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

ஆகஸ்ட் 1, 2021 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் 23 வயதுக்குள் உள்ள இந்திய குடிமகன் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

எஸ்.எஸ்.சி ஜி.டி 2021 அறிவிப்பு – முக்கிய தேதிகள்:

  1. Start of Online Application for SSC GD Exam 2021 – July 17, 2021
  2. Last date to apply online – August 31, 2021
  3. Last date to pay fees online – September 2, 2021
  4. Last date of generating Offline Challan – September 4, 2021
  5. Fee Payment by Offline Challan – September 7, 2021
  6. SSC GD Constable 2021 Tier I CBT – Exam Date -To be announced later

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தர்களுக்கு சம்பள நிலை 3 இன் படி, ரூ. 21700 – 69100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

  • Computer Based Examination
  • PET/ PST or Detailed Medical Examination (DME)/ Review Medical Examination (RME)

விண்ணப்ப கட்டணம்:

  • செலுத்த வேண்டிய கட்டணம்: ரூ .100 / –
  • SC/ST,ESM & Women – கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை ssc.nic.in இல் விரைவாக நிரப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். SSC , இணையதளத்தில் புதிய பதிவு என்பதைக் கிளிக் செய்து விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கவும். ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைய உள்ளது என்பதால் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official PDF Notification – https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_ctgd_17072021.pdf

Apply Online – https://ssc.nic.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: