உலகம்

கொரோனா தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்..!

கொரோனா தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வர நீண்ட காலம் ஆகும் என தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குநர், தடுப்பு நடவடிக்கை மூலம் அதனை சில மாதங்களில் கட்டுப்படுத்தி விடலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது புதிய புதிய பரிமானங்களில் உலகம் முழுவம் பரவி வருகிறது. பொதுமுடக்கம், தடுப்பூசிகள் என கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதனம், “மக்களின் அலட்சியம் காரணமாக கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிறது என்றும் இளம் வயதினர் தங்களுக்கு கொரோனா வராது என உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.

சில நாடுகளில், கொரோனா தொடர்ந்து பரவிவரும் போதிலும், தேவையான தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் இன்னும் நடைமுறையில் இல்லை என்றும் வைரஸ் பரவும் ஆபத்து அதிகமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும் என்று குறிப்பிட்ட அவர், தடுப்பு நடவடிக்கை மூலம் கொரோனாவை சில மாதங்களில் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: