உலகம்

திருநங்கை மனைவி கூறிய அந்த வார்த்தை.. ஆத்திரத்தில் கணவனின் துணீகரச் செயல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் திருநங்கை மனைவியை கத்தியால் சரமாரியாக தாக்கி கொலை செய்த வழக்கில், அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நவம்பர் 18 புதன்கிழமை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அவருக்கு பிணை வழங்க மறுத்த நீதிமன்றம் சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி முன்பு அழுது புலம்பிய குற்றவாளியை போலீசார் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

சம்பவத்தன்று டவுன்டவுன் மியாமி பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 4.25 மணிக்கு 28 வயதான Ygor Arrudasouza போலீசாரை அழைத்து, தாம் மனைவியை கத்தியால் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

அந்த குடியிருப்பின் படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் குளித்த நிலையில் பெண் ஒருவரை கண்ட போலீசார், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கொல்லப்பட்ட அந்த பெண்மணி, மியாமியில் ஒருபால் ஈர்ப்பு சமூகத்தினரிடையே மிகவும் பிரபலமானவர் எனவும் அவரது பெயர் Yuni Carey எனவும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது.

அவரது கணவர் அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று, தாம் போதை மருந்து பயன்படுத்தி இருந்ததாகவும்,

வாக்குவாதத்தின் இடையே, உன்னை விட சிறந்த ஆணை எனக்கு கணவராக கிடைக்கும் என கேரி கூறியதாலையே தாம் அத்திரம் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சமையலறைக்கு சென்று கத்தியுடன் திரும்பிய நிலையில், படுத்திருந்த கேரியை சரமாரியாக தாக்கியதாக அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

2020-ல் அமெரிக்காவில் கொல்லப்படும் 37-வது திருநங்கை கேரி என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

loading...
Back to top button
error: Content is protected !!