மாவட்டம்
3வது பிரசவத்தால் உயிரிழந்த பெண்.. திருச்சியில் பரிதாபம்..

திருச்சி முசிறி அன்னஜாலம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(26). இவரது மனைவி மல்லிகா(27). இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தை உள்ள நிலையில், மூன்றாவது பிரசவத்திற்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் திடீரென உடல்நிலை மோசமாகி உள்ளது.
இதனை தொடர்ந்து மல்லிகா சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.