தமிழ்நாடு

தமிழ்நாட்டின் மொத்த கடன் தொகை ரூ.5.12 லட்சம் கோடி – மாநிலங்கள் பட்டியல்!!

நாடு முழுவதும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி கடன் தொகை அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல வங்கிகளில் பலர் கடன் பெற்று அந்த தொகையை திருப்பி செலுத்த முடியாமல் அது வார கடனாக உள்ளது. மேலும் கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது கடன் தவணை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அது போல எந்த அவகாசமும் வழங்கப்படவில்லை.

அஞ்சலிக்கு இதய நோய், குழந்தை பிறப்பதில் சிக்கல் – ‘பாரதி கண்ணம்மா’ இன்றைய எபிசோட்!

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி கடன் தொகை அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையில் வெளியிட்டுள்ளது.

அதில் உத்தர பிரதேசம் மாநிலம் 6.62 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து கடன் சுமை உள்ள மாநிலங்களின் விவரங்கள் பின்வருமாறு,

  • இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா, 5.36 லட்சம் கோடி கடன் சுமையுடன் உள்ளது.
  • மூன்றாவது இடத்தில தமிழகம், 5.12 லட்சம் கோடி கடன் சுமையுடன் உள்ளது.
  • நான்காவது இடத்தில், மேற்கு வங்கம், 4.9 லட்சம் கோடி ருபாய் கடன் சுமையுடன் உள்ளது.
  • ஐந்தாவது இடத்தில் ராஜஸ்தான், 3.91 லட்சம் கோடி கடன் சுமையுடன் உள்ளது.
  • ஆறாவது இடத்தில் கர்நாடகா, 3.7 லட்சம் கோடி கடன் சுமையுடன் உள்ளது.
  • ஏழாவது இடத்தில் ஆந்திர பிரதேசம், 3.57 லட்சம் கோடி கடன் சுமையுடன் உள்ளது.
  • எட்டாவது இடத்தில் குஜராத், 3.54 லட்சம் கோடி கடன் சுமையுடன் உள்ளது.
  • ஒன்பதாவது இடத்தில் கேரளா, 2.96 லட்சம் கோடி ருபாய் கடன் சுமையுடன் உள்ளது.
  • பத்தாவது இடத்தில் மத்திய பிரதேசம், 2.78 லட்சம் கோடி ருபாய் கடன் சுமையுடன் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: