மாவட்டம்

திருடியதை திருப்பி கொடுத்த திருடன்.. திருச்சியில் நடந்த ருசிகர சம்பவம்..!

திருச்சியில் திருடன் ஒருவன் தான் திருடியதை கொண்டு வந்து திருப்பி கொடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளஞ்சியம் என்பவர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் வசித்து வருகிறார். குஜராத்தில் இருக்கும் இவரது மகள் அண்மையில் தாயை பார்க்க வந்துள்ளார்.

அங்கிருந்து எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள தனது தோழியை பார்க்க தாயும், மகளும் இருசக்கர வாகனத்தில் இரவு நேரத்தில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

கிராப்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே 7 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் இவர்களின் ஹேண்ட் பேக்கை திருடியுள்ளான்.

இவர்கள் அவனை விரட்டி சென்று பிடிக்க முற்பட்ட பொது அவன் தப்பித்துவிட்டான். அதில் 15 ஆயிரம் ரூபாய், ஏடிஎம் கார்டுகள், 2 செல்போன்கள் இருந்ததால் வர்கள் எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.

வீட்டிற்கு சென்ற பின் மகள் தனது போனுக்கு அழைத்து அந்த திருடனிடம் தங்களது நிலைமையையும் போன் மற்றும் ஏடிஎம் கார்டுகளை திருப்பித் தருமாறும் கெஞ்சியுள்ளார்.

இதனால் மனமிறங்கிய திருடன் அப்பொருட்டாக்காலி திருப்பித்தர ஒப்புக்கொண்டுள்ளான். மேலும், அவர்களை சென்னை-திருச்சி பைபாஸ் சாலையில் இருக்கும் கார் ஷோரூம் அருகே வரச் சொல்லியுள்ளான்.

இது குறித்து தனது தம்பியிடம் தகவல் தெரிவித்துள்ளார் இளஞ்சியம். அதனால், அவர் அங்கு சென்றபோது அந்த இடத்திற்கு வந்த திருடன் பேக்கை தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.

அதில் பணம் மட்டும் இல்லை. அவர்கள் கேட்டபடி இரண்டு போன்களும் ஏடிஎம் கார்டுகளும் இருந்துள்ளது. இந்த சம்பவம் கேட்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: