உலகம்

பொழுதுபோக்கு பூங்காவை தீ வைத்து எரித்த தலீபான்கள்!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான்கள் எப்போதும் எந்த நாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டோம் என்றும் உலக நாடுகள் எங்களை அங்கீகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், ஆப்கானிஸ்தான் மக்களின் நிலைமை இன்னும் ஒரு அசாதாரண நிலையே இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றனர்.

அதே நேரத்தில், ஷெபர்கனில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவிற்குள் நுழைந்த தலீபான் அமைப்பினர், பூங்காவில் ராட்டினம் போன்றவற்றில் ஆடிப்பாடி மகிழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இறுதியில் அந்த பொழுது போக்கு பூங்கா தீப்பற்றி காட்சிகளும் வேகமாக பரவி வருகின்றன.

இஸ்லாமிய வழக்கத்திற்கு மாறாக அந்த பொழுதுபோக்கு பூங்காவில் சிலைகள் போன்றவை இருந்ததால், பொழுதுபோக்கு பூங்கா தலிபான்களால் தீவைக்கப்பட்டிருக்கலாம் என்று நெட்டிசன்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:  “பூமிக்கு பக்கத்தில் இப்படி ஒரு கோளா?” – ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்.. களத்தில் இறங்கும் நாசா..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: