தொழில்நுட்பம்இந்தியா

பெரும் சரிவை கண்ட பங்குச்சந்தை.. 900 புள்ளிகளுக்கு மேல் சரிவு..

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் 900 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து பங்குசந்தையில் வீழ்ச்சியை கண்டுள்ளது. சன்பார்மா, டைட்டன், ஐசிஐசிஐ ஆகிய நிறுவங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளது.

பங்குச்சந்தை சரிவு

பங்குச்சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு எண்ணான சென்செக்ஸ் புள்ளிகள் 900க்கும் மேல் குறைந்து 47 ஆயிரம் புள்ளிகளோடு வர்த்தகம் செய்யப்படுகிறது. மேலும் நிஃப்டி புள்ளிகளும் கடும் சரிவை சந்தித்து 13 ஆயிரத்துக்கும் கீழ் வர்த்தகமாகிறது. இது பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக கருதப்படுகிறது.

bse 5f644f7196e2d

 

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 273.75 புள்ளிகள் சரிந்து 13,967.50 க்கு வர்த்தகமாகிறது. மொத்த வர்த்தகத்தில் இது 1.91 சதவீதம் சரிவாக காணப்படுகிறது. மேலும் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 973.66 புள்ளிகள் வரை சரிந்து 47,409 ஆக வர்த்தகமாகிறது. இது மொத்த வர்த்தகத்தில் 1.94 சதவீதம் சரிவாகும்.

sharemarket 224

 

பங்குசந்தையில் பங்கு வைத்துள்ள சென்செக்ஸ் புள்ளியில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில் டைட்டன், ஐசிஐசிஐ, சன்பார்மா, எச்.டி.எப்.சி உள்ளிட்ட 24 நிறுவனங்கள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஆக்சிஸ் வங்கி வீழ்ச்சியில் அதிக அளவாக 4.05 சதவீதமும் டைட்டன் நிறுவனம் 3.88 சதவீதமும், ஐசிஐசிஐ 2.90 சதவீதமும் சரிந்துள்ளது. பங்குச்சந்தையில் இதுவரை 6 நிறுவங்களின் பங்குகள் மட்டுமே உயரத்தில் காணப்படுகிறது.

Back to top button
error: Content is protected !!