ஆன்மீகம்

தினமும் நாம் செய்யும் பாவங்கள்!

பாவம் செய்தால் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தாலும், சிலரால் சில பாவங்களை செய்யாமல் இருக்க முடியாது. அதை பாவம் என்று நாம் தெரிந்தே செய்வதில்லை. நம்முடைய சூழ்நிலை, நமக்கு இருக்கும் கோபம், வெறுப்பு இவையெல்லாம் சேர்ந்து செய்யக்கூடாத ஒரு செயல்பாட்டை செய்வதையே பாவம் என்கிறோம். அதாவது ஒருவரை தரக்குறைவாக நடத்துவதும், பேசுவதும், பிறர் பொருட்களின் மீது ஆசை படுதல் போன்றவை, நம்முடைய பாவக் கணக்கில் சேர்ந்து விடுகிறது. அவ்வகையில் தெரிந்தோ, தெரியாமலோ தினந்தோறும் நாம் சில பாவங்களை செய்கிறோம். அத்தகைய பாவங்களை இங்கு பார்ப்போம்.

எப்படி சேரும் :

கர்வம் கொள்ளுதல்

கர்வம் அதிகமாக உள்ளவர்களுக்கு ஆயுட்காலம் குறைவு தான். அவற்றை ஒழிக்க, தான் செய்யும் செயல்களில் என்னென்ன குற்றங்கள் இருக்கிறது என்று தெரிந்து மனதளவிலேயே ஒப்புக் கொள்ள வேண்டும்.

மற்றவர்களின் செயல்களில் இருக்கும் நல்ல குணங்களை பாராட்ட வேண்டும்.

பிறரைப்பற்றி பேசுதல்

பிறரை பற்றி எப்பொழுதும் புறம் பேசுவது மிகப்பெரிய பாவமாகும்.

உண்மையும், அன்பும் நிறைந்த வார்த்தைகள் எதுவோ, அந்த வார்த்தைகளை மட்டும் பேசுவது தான் தவமான வாழ்க்கை என்கிறது மகாபாரதம்.

பேராசை

எல்லா விஷயங்களையும் நாம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற அதீத ஆசையின் காரணமாக நம்முடைய தியாக மனப்பான்மை அழிந்துவிடும்.

நாம் இந்த உலகத்தில் பிறந்ததே அடுத்தவர்களுக்கு உதவுவதற்கு என்ற தியாக மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதின் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

கோபம்

கோபத்தை வென்ற ஒருவனால் தான் யோகியாக இருக்க முடியும்.

எது தர்மம், எது அதர்மம் என்று ஆராய வேண்டும்.

நாம் யார் மீதும் கோபப்படக்கூடாது. அதேசமயம் யாராவது நம்மீது கோபப்பட்டால், அதை சகித்துக் கொள்கிற மனப்பான்மை இருக்க வேண்டும்.

சுயநலம்

சுயநலம் நம்முடைய மனதில் இருக்கும் அன்பு, கருணை ஆகியவற்றை அழித்துவிடும்.

அடுத்தவர்கள் இன்பமாகவோ, வசதியாகவோ இருப்பதைக் கண்டு, பொறாமை படுவது மிக, மிக தவறு.

அடுத்தவர்கள் கஷ்டப்படுவதைக் கண்டு நாமும் மனதளவில் கஷ்டப்பட்டால் தான், நம்மை விட்டு சுயநலம் அழிந்து போகும்.

துரோகம்

அவரவர் செய்த துரோகத்திற்கு அவரவர் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது இயற்கையின் விதி. அவற்றை நாம் கையாள கூடாது.

எல்லோரிடமும் எந்த விருப்பு வெறுப்புமின்றி, நட்பு மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். அடுத்தவர்கள் மீது கருணை செலுத்த வேண்டும்.

அபகரித்தல்

பிறன் மனை, பிறர் சொத்து, கோயில் சொத்து போன்றவைகளை அபகரிப்பதாலும் பாவங்கள் ஏற்படும்.

எனவே, தவறியும் கூட பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது.

என்ன தீர்வு

கோயிலுக்கு சென்று இறைவனை வழிபடுபவதால் பாவங்கள் தீரும்.

லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமானை வழிபடுவர்களுக்கு பாவங்கள் போய்விடும்.

உணவு இல்லாமல் வருந்துபவர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

ஏழைகளுக்கு வருடத்திற்கு ஒருமுறையாவது புதிய ஆடைகள் வங்கி தரலாம்.

பறவைகளுக்கு உணவு அளிப்பதனாலும் செய்த பாவங்கள் தீரும்

சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருப்பவர்களுக்கு அரிசி தானமாக கொடுக்கலாம்.

பசுவிற்கு கீரை, பழங்கள் உள்ளிட்டவற்றை கொடுப்பதால், நாம் செய்த பாவங்கள் அழியும்.

தெரிந்தோ தெரியாமலோ யாருக்காவது நீங்கள் தீங்கு செய்து விட்டதாக நினைத்து வருத்தம் அடைந்தால், அவருக்கு துளசிச் செடியை வாங்கி பரிசாக கொடுக்க அவை நீங்கும்.

இவ்வாறு செய்வதினால் நம் தலைமுறைக்கு மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து புண்ணியம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: