உலகம்

டெல்டா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல்..!

டெல்டா வகை கொரோனா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல இயக்குனரான மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் இதை தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

டெல்டா பரவல் மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையாக ஆக கூடும்.

அனைத்து வகையான கொரோனா வைரஸ்களை விட இந்த டெல்டா வகையானது மிக விரைவாக பரவிவருகிறது என அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் திட்டத்தின் வழியே 75 லட்சம் மாடர்னா தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: