தமிழ்நாடுமாவட்டம்

கழுத்தை இறுக்கி கொடூர கொலை! வீட்டிற்கு ஓடி வந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி: விசாரணையில் தெரிந்த உண்மை

மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் கணவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை, பூந்தமல்லி, ரைட்டர் தெருவை சேர்ந்தவர் நூரூதீன். 52 வயது மதிக்கத்தக்க இவருக்கு அசினா பேகம்(42) என்ற மனைவியும், ஒரு அல்டாப் என்ற மகனும், மகளும் உள்ளனர்.

மகள் திருமணமாகி கணவருடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். வீட்டில் மூன்று பேர் மட்டும் உள்ளனர்.

நேற்று காலை வழக்கம் போல் மகன் அல்டாப் வேலைக்கு சென்றுவிட்டார்.

அதன் பின், தன்னுடைய தாயின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். பல முறை முயற்சி செய்தும், அவர் போன் எடுக்காத காரணத்தினால், சந்தேகமடைந்த அவர் உடனடியாக வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டில் தாய் மயக்க நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக அருகில் இருப்பவர்களின் உதவியுடன், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் விரைந்து வந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவரது கழுத்து இறுக்கப்பட்டும், முகத்தில் காயங்களும் இருப்பது தெரிய வந்தது. மேலும் அவர் கழுத்தை வயரால் இறுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

அவர் கணவர் குறித்து விசாரித்து போது, கணவர் செல்போனை வைத்துவிட்டு தலைமைறைவானது தெரியவந்தது. இதனால் அவர் மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருக்கலாம்? அல்லது வேறு ஏதும் காரணமாக என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே வழக்கு மாற்றப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

loading...
Back to top button
error: Content is protected !!