மாவட்டம்தமிழ்நாடு

பெரிதும் நம்பிய காதல் கணவனால் திருநங்கைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! அவர் முகத்திரையை கிழிக்க வீடியோ எடுத்து செய்த செயல்

திருநங்கையின் சொத்திற்காக வளர்ப்பு மகனை இரக்கமின்றி துன்புறுத்திய தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தை சேர்ந்த திருநங்கை கண்ணகி. இவர் ராகுல் எனும் சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் அப்துல் முபாரக் என்பவரை காதலித்து வந்த கண்ணகி கடந்த 2016 ஆம் ஆண்டு கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின்போது அவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் கண்ணகி தனது மகனோடு கணவரின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். மேலும் தனது காதல் கணவருக்காக செல்போன் சர்வீஸ் கடை ஒன்றையும் வைத்து கொடுத்துள்ளார்.

கண்ணகிக்கு சொந்தமான வீட்டை தனக்கு எழுதி தருமாறு அப்சல் முபாரக் கண்ணகியிடம் கேட்டுள்ளார். இதற்கு கண்ணகி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் பிரச்சினை அங்கிருந்து தான் தொடங்கியது.

வளர்ப்பு மகனால் சொத்து பறிபோய் விடுமோ என அஞ்சிய அப்சல் முபாரக் வளர்ப்பு மகன் என கூட பாராமல் ராகுலை தினந்தோறும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தரவில்லை எனில் வளர்ப்பு மகனை கத்தியால் குத்திக் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

தான் பெரிதும் நம்பிய காதல் கணவனின் செயலால் அதிர்ச்சி அடைந்த திருநங்கை கண்ணகி தனது மகனை அப்சல் கடுமையாக தாக்கி, கொலை மிரட்டல் விடுக்கும் காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்து கண்ணீருடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் அப்சல் முபாரக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button
error: Content is protected !!