தமிழ்நாடு

அதிரடியாக அதிகரித்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..

தங்கம் விலை கடந்த 3 மாதமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் 4,618க்கும், சவரன் 36,944க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு 13 அதிகரித்து ஒரு கிராம் 4,631க்கும், சவரனுக்கு 104 அதிகரித்து ஒரு சவரன் 37,048க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதாவது, நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 20 அதிகரித்து ஒரு கிராம் 4638க்கும், சவரனுக்கு 160 அதிகரித்து சவரன் 37,104க்கும் விற்கப்பட்டது.

gold purchase

அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் சவரன் 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விசேஷ நாட்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை அதிகரித்துள்ளது நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Back to top button
error: Content is protected !!