நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்று செவ்வாய்கிழமை பங்குச் சந்தைக்கு சாதகமானதாகத் தெரிகிறது. கடந்த சில நாட்களாக பெரும் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
சென்செக்ஸ் 108.32 புள்ளிகள் அதிகரித்து 54,578.99 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதே சமயம் 47.40 புள்ளிகள் உயர்ந்து 16,350.50 என்ற அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
பிஎஸ்இ சென்செக்ஸில் சேர்க்கப்பட்டுள்ள 30 பங்குகளில் 26 பங்குகள் ஏற்றத்தையும், 4 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியையும் கண்டு வருகின்றன.
பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள வலுவான மீட்சியின் காரணமாக செவ்வாய்க்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் பெரும்பாலான குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன. நிஃப்டி பேங்க், ஆட்டோ, எம்எம்சிஜி, மீடியா, ரியாலிட்டி ஆகியவை லாபம் பார்க்கின்றன.
மறுபுறம், ஐடி, உலோகம், நுகர்வோர் பொருட்கள் ஆகியவற்றில் சரிவு உள்ளது. அதே சமயம் ஹெவிவெயிட் பங்குகள் இன்று ஏற்றத்துடன் காணப்படுகின்றன. இதன் காரணமாக சந்தை வலுப்பெற்று வருகிறது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh