இந்தியா

காதலனின் முதுகில் குத்தி துடிதுடிக்க கொன்ற காதலி! தெரிய வந்த காரணம்

காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், காதலி அவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், தாடேபல்லி கூடம் பகுதியைச் சேர்ந்தவர் தாத்தாஜி நாயுடு (25). இவரும் மலக்பல்லி பகுதியைச் சேர்ந்த பாவனி (22) என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு தாத்தாஜி நாயுடு வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

அதற்கு, தாத்தாஜியும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்த பவானி, நேற்று முன் தினம், திருமணம் குறித்து பேச வேண்டும் என்று தாத்தாஜி நாயுடுவை போனில் அழைத்துள்ளார்.

அதன் படி அவர் காதலி அழைத்த பங்கிடி எனும் இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு வந்த பவானி, தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறாயா? என்று கேட்க, இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளார்.

அதன் பின் இருவரும் இரவு வரை பல இடங்களுக்கு இரு சக்கர வாகனத்தில் சுற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்து பவானி தன்னை ஊரில் இறக்கிவிடும் படி கூற, தாத்தாஜி நாயுடுவும், அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

ஊர் செல்லும் வழியில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், தாத்தாஜியின் முதுகில் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து போன அவர், அந்த இடத்திலே இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி, பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரியவர, போலீசார் உடனடியாக பவானியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button
error: Content is protected !!