உலகம்

திடீரென மஞ்சள் நிறமாக மாறிய நபர்.. சிகரெட் பழக்கத்தால் வந்த வினை..

ஒரு மனிதனின் முழு உடலும் பிரகாசமான மஞ்சள் நிறமாக மாறியதற்கான காரணத்தை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர் உடல் பெயிண்ட் பூசப்பட்டு இருப்பதைப் போல தோற்றமளித்தது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

டு என்ற குடும்பப்பெயரால் மட்டுமே அடையாளம் காணப்பட்ட 60 வயதான நபர் உடல்நலக்குறைவால் கிழக்கு மத்திய சீன மாகாணமான ஜியாங்சுவில் உள்ள ஹுவாய் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் அவரது உடல் ஒளிரும் (மஞ்சள் வண்ணத்தில்) இருப்பதை மருத்துவர்கள் கவனித்தனர். இதற்கு காரணம் அவரது கணையத்தில் ஏற்பட்ட கட்டியால் ஏற்பட்ட மஞ்சள் காமாலை என மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

பல ஆண்டுகளாக அவரிடம் இருந்த புகைப்பிடிக்கும் பழக்கம் கட்டிக்கு பங்களித்ததாக மருத்துவர்கள் கூறியதுடன் அவருடைய உடலின் மற்றொரு பகுதியில் இரண்டாவது கட்டியையும் கண்டறிந்தார்கள்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

டு என்கிற மனிதன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் கட்டிகளை அகற்றிய பின்னர், அவர் உயிர்வாழ வாய்ப்பு இருந்தால் இரண்டையும் விட்டுவிடுமாறு மருத்துவர்கள் வலியுறுத்தினார்கள். கட்டிகளை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்கியதும், அவரது தோல் அதன் இயல்பான நிறத்திற்கு திரும்பியுள்ளது.

மஞ்சள் காமாலை எனப்படும் மருத்துவ நிலைக்கு பித்தநீர் பாதை அடைப்பு ஒரு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறினர், இதன் விளைவாக சருமத்தின் மஞ்சள் அல்லது பச்சை நிற நிறமி மற்றும் கண்களின் வெண்மையானது கூட ஏற்படுகிறது. டிஸ்சார்ஜ் ஆன நபர், இனி என் வாழ்க்கையில் சிகரெட்டினையும், மதுவையும் தொட்டு கூட பார்க்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.

Back to top button
error: Content is protected !!