தமிழ்நாடு

8 மாத கர்ப்பிணியிடம் செயின் பறிக்க முயன்ற திருடன்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..!

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் 8 மாத கர்ப்பிணியிடம் செயினை பறிக்க முயற்சித்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ரேணுகா நகரை சேர்ந்த கீதா என்ற பெண்மணி வீட்டிற்கு வெளியில் இருக்கும் கோயிலில் வழிபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் திடீரென கர்ப்பிணியை பிடித்து இழுத்து சங்கிலியை பறிக்க முயற்சித்தனர். இதில் 8 மாத கர்ப்பிணி பெண்ணான கீதா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இருந்தபோதும் செயினை பறிக்க திருடன் முயன்றதால், சங்கிலியை இருக்கமாக பிடித்துக் கொண்டு கர்ப்பிணி போராடினார்.

இதனால் கர்ப்பிணிக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சத்தம் போட்டதால் செயின் பறிப்பில் ஈடுபட முயன்றவர்கள் தப்பி ஓடினர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நடைபெறும் போது அருகில் இருந்தவர்கள் அந்தப் பெண்ணை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  ’பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்களே’.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: