தமிழ்நாடு

ஜிகா வைரஸால் குழந்தை ஊனமாக பிறக்க வாய்ப்பு – பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

கொசுவினால் தற்போது பரவி வரும் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தை உடல் ஊனத்துடன் பிறக்க வாய்ப்பு இருப்பதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பு கொசு கடிப்பதால் மனிதர்களுக்கு உண்டாகும். இந்த வைரஸுக்கு எந்தத் தடுப்பூசியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஜிகா வைரஸ் தொற்று கர்ப்பிணிகளுக்கு ஏற்பட்டால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படலாம். ஜிகா வைரஸ் மூன்று முதல் பதினான்கு நாட்கள் வரை மனித உடலில் இருக்கும்.

இந்த வைரஸ் தற்போது கேரளாவை அச்சுறுத்தி வருகிறது. கேரளாவில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக ஆறு பேர் கொண்ட மத்திய குழு அம்மாநிலம் செல்வதாக தகவல்கள் வெளியானது.தற்போது இந்த வைரசால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாக பிறக்க வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: