தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 5ந் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 6ந் தேதியும் தொடங்கின. பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி, வரும் 31-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் எழுத உள்ளனர். தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. தேர்வை கண்காணிக்க 1000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh