ஆரோக்கியம்

நுரையீரல் சம்பந்தமான நோய்களில் இருந்து நம்மை காக்கும் செடி?

மூச்சுக்காற்றை இழுத்து வெளிவிடும் முக்கிய உறுப்பாக நுரையீரல் திகழ்கிறது. வாயுப் பரிமாற்றம் செய்வது நுரையீரலின் முக்கிய பணியாகும். மேலும், சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதும், செயலிழக்க செய்வதும் இதன் பணியாக இருக்கிறது. இந்நிலையில், நுரையீரலின் செயல்திறன், அதற்கு என்ன பாதிப்பு வரும், அவற்றை எவ்வாறு போக்குவது என்று பார்க்கலாம்.

நுரையீரல் என்ன செய்கிறது

நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிஜனை உள் எடுத்துக்கொள்வதற்கும், கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது.

நாளொன்றுக்கு சராசரியாக 22,000 முறை சுவாசிக்கின்ற நாம், சுமார் 9,000 கன அடி காற்றை உள்ளே இழுத்து வெளியிடுகிறோம்.

அவ்வாறு காற்றை உள்ளே இழுத்து வெளியிடும் வேலையை நுரையீரல் திறம்பட செய்து வருகிறது.

என்ன பாதிப்பு

இருமல், சளி, மூச்சு திணறல், நெஞ்சு வலி, இருமலுடன் இரத்தம் வருதல், இளைப்பு போன்றவை நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகளாகும்.

தற்காப்பு

பனிக்காலத்தில் வறண்ட காற்றை சுவாசிக்கும்போது நுரையீரல் பாதிக்கப்படும் என்பதால், இக்காலங்களில் வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.

பஞ்சு, குவாரி, சிமெண்ட் போன்ற தூசி நிறைந்த இடங்களில் பணியாற்றும் போது முகத்துக்கு முகமூடி அணிந்து கொள்ள வேண்டும்.

தூசு நிறைந்த பகுதிகளுக்கு செல்லும் போது மூக்கில் முக மூடி அணிவது நல்லது.

பிராணயாமம், நாடி சுத்தி, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்றவற்றை தினமும் கடைபிடிப்பது நுரையீரலுக்கு பாதுகாப்பாகும்.

புகைபிடிப்பதை தவிர்ப்பது முக்கியமாகும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை சாப்பிடலாம்.

துளசி

நுரையீரல் நோய்களை தீர்க்கும் செடியாக துளசி திகழ்கிறது.

துளசி இலை சிறிதளவு, இரண்டு சிட்டிகை மிளகு தூள், சுக்கு தூள், மல்லித்தூள் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை 400 மில்லி தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும். பாதியாக 200 மில்லியாக வற்றியதும் பால் மற்றும் கருப்பட்டி சேர்த்து தினமும் குடித்து வந்தால் நுரையீரல் பலம் பெறும்.

துளசியில் 21 இலைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மிளகு சேர்த்து மைய அரைக்க வேண்டும். பிறகு வெள்ளைத்துணியில் வைத்து பிழிந்து இரண்டு அல்லது மூன்று துளிகள் மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வாரம் ஒரு நாள் தொடர்ந்து காலையில் கொடுத்தால் நுரையீரல் மற்றும் அது சம்பந்தமான நோய்கள் வராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: