தமிழ்நாடுமாவட்டம்

அக்கா போட்டு கொடுத்த திட்டம்.. காதலித்த காதலனை போட்டு தள்ளிய தங்கை!

காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் ஆனதால், காதலி அவரை உறவினருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் இருந்து வைகைபுதூர் செல்லும் சாலையில், இருக்கும் பாலூத்து என்ற இடத்தில், கடந்த 21-ஆம் தேதி எரிந்த நிலையில், ஆண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது.

இது குறித்து தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தது திண்டுக்கல் மாவட்டம் விருவீடு கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ்(29) என்வர் தெரியவந்தது.

இவர் காணமல் போய்விட்டதாக கடந்த 15-ஆம் தேதி அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி பிரேதபரிசோதனையிலும் இவர் கொலை செய்யப்பட்டு தான் இறந்திருக்கிறார் என்பதும் உறுதியானதால், போலீசார் இந்த சம்பவம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஆனந்தராஜுன் சொந்த ஊர் எங்கோ இருக்க, இவர் இங்கு இறந்து கிடந்தது எப்படி என்று போலீசார் கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, ஆனந்தராஜ் வடுகபட்டியை சேர்ந்த விஜயகாந்தி என்பவரை காதலித்து வந்துள்ளார், அவரை பார்க்க சென்றவர் தான் திரும்பி வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் விஜயசாந்தியை தேடிக் கொண்டிருந்த போது, விஜயசாந்தி அவருடைய உறவினர் பிரபாகரன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் செல்லுவது போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக பேலீசார் இருவரையும் விரட்டி பிடித்துள்ளனர். அதன் பின் விஜயசாந்தியிடம் மேற்கொண்ட விசாரணையில், நான் ஆனந்தராஜை உயிருக்குயிராக காதலித்தேன். ஆனால் அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார். ஆனந்தராஜுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்துவிட்டனர்.

நான் இந்த விஷயம் கேள்விப்பட்டு, பிரபாகரனை அழைத்துகொண்டு, ஆனந்தராஜிடம் நியாயம் கேட்டேன்.

அப்போது எங்களுக்குள் தகராறு வரவும், ஆத்திரத்தில் நாங்கள் இருவரும் ஆனந்தராஜை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டோம்.

அதன் பின், சடலத்தின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு, திண்டுக்கல்லில் ஆசைப்பாண்டி என்பவர் வீட்டில் நாங்கள் தலைமறைவாக இருந்தோம்.

இந்த கொலைக்கு திட்டம் போட்டு கொடுத்தது, என் அக்கா வித்யா தான் என்று கூற, போலீசார் விஜயசாந்தி, வித்யா, ஆசைப்பாண்டி, பிரபாகரன் என 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Back to top button
error: Content is protected !!