திருமண நிகழ்ச்சியில் சப்பாத்தி தயாரிக்கும் போது மாவில் எச்சில் துப்பிய நபர்..

திருமண நிகழ்ச்சியில் சப்பாத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர், சப்பாத்தி மாவில் எச்சில் துப்பும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. இது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர், சப்பாத்தி மாவை தயார் செய்துள்ளார். இவர் சப்பாத்தி தயார் செய்தபோது மாவில் எச்சில் துப்புகிறார். இதனை கவனித்த நபர் ஒருவர், இச்சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் காவல்துறையினர், மீடியா, சமூக அமைப்புகளின் டுவிட்டர் கணக்குகளையும் டேக் செய்திருந்தார். இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வைரலான இந்த வீடியோவை பார்த்த, இந்து ஜக்ரான் மன்ச் என்ற அமைப்பின் மீரட் பகுதி தலைவர் சச்சின் சிரோகி என்பவர், வீடியோவில் உள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், சப்பாத்தில் எச்சியில் துப்பியது மீரட் பகுதியைச் சேர்ந்த நவுஷத் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், “அந்த இளைஞருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும், அதன் முடிவுகள் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், கொரோனா பரப்பியதாக மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்படும்” எனவும் தெரிவித்துள்ளனர்.