மாவட்டம்

காந்தி மார்கெட் திறக்கும் வரை.. திருச்சி மக்களுக்கு காய்கறி கிடைக்காது..

திருச்சி காந்தி மார்க்கெட் நிலை குறித்து ஆலோசனை கூட்டம் பால் பண்ணை வெங்காய மண்டியில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளரிடம் கோவிந்தராஜுலு பேசும்பொழுது……. 24ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் மாவட்டம் முழுவதும் காய்கறிகள் கிடைக்காது. காய்கறிகள் கொண்டு வரும் எந்த வாகனத்தையும் மாவட்டத்துக்குள் நுழைய விடமாட்டோம். 27-ஆம் தேதி முதல் காந்தி மார்க்கெட்டில் மட்டுமே வியாபாரம் செய்வோம். திறக்கப்பட வில்லை என்றால் 27ம் தேதி காந்தி மார்க்கெட் முன்பு உண்ணாவிரதம் இருப்பதோடு, வியாபாரிகளின் ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டைகளை திருச்சி மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்போம்.

அதோடு மட்டுமில்லாமல் தொடர் போராட்டமாக குடும்பத்துடன் தமிழக முதல்வர் இல்லத்தை முற்றுகையிடுவோம். தமிழகம் முழுவதும் மார்க்கெட்டுகள் திறக்கப்பட்ட நிலையில் எங்கள் தாய்வீடான காந்தி மார்க்கெட் மற்றும் மூடப்பட்டுள்ளது. தற்போது எடுக்கப்பட்ட முடிவே இறுதியான முடிவு. காந்தி மார்க்கெட் திறக்கும் வரை காய்கறிகள் திருச்சி மாவட்ட மக்களுக்கு கிடைக்காது. மேலும் தேர்தலை புறக்கணித்து வாக்களிக்க மாட்டோம் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

loading...
Back to top button
error: Content is protected !!