தமிழ்நாடு

1முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை மீண்டும் துவங்குவது குறித்து முதல்வர் இன்று (செப்டம்பர் 21) முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட இன்று வரையிலும் முழுமையாக திறக்கப்படவில்லை. என்றாலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவல் ஓய்ந்திருக்கும் சூழலில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதே போல கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்படவில்லை. அதாவது கொரோனா பேரலையால் இந்த குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களின் கல்வி தான் அதிகம் பாதிக்கப்பட்டது. ஏனென்றால் அடிப்படை கல்வி என்பது இம்மாணவர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இத்தகைய காரணங்களை கருத்தில் கொண்டு 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது.

அந்த வகையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஆணையர் நந்தகுமார் ஆகியோர் கடந்த வாரங்களில் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆலோசனை தொடர்பிலான அறிக்கையும் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த அறிக்கைகளின் அடிப்படையில் முதல்வர் முக ஸ்டாலின், பள்ளிகளை மீண்டுமாக திறப்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இன்று (செப்டம்பர் 21) நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை, பள்ளிக்கல்வித் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசிக்க இருக்கிறார். அந்த வகையில் முதல் கட்டமாக, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை துவங்க அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகள் அடுத்த வாரம் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  சுகாதாரத்துறை அதிகாரிக்கு வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை!
Back to top button
error: