இந்தியா

ஒமைக்ரான் அச்சுறுத்தல்.. பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை!!

இந்தியாவில் ஒமைக்‍ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ள நிலையில், பரவல் தடுப்பு நடவடிக்‍கை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை முக்‍கிய ஆலோசனை நடத்துகிறார்.

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த சிலருக்‍கு ஒமைக்‍ரான் தொற்று முதலில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது, மஹாராஷ்ட்ரா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, கேரளா, ஹரியானா, தமிழகம், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களுக்‍கு பரவ தொடங்கி உள்ளது.

தடுப்பு நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் போதிலும், நாடு முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவில் ஒமைக்‍ரான் பாதிப்பு எண்ணிக்‍கை 213-ஆக அதிகரித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் 57 பேருக்‍கும், மஹாராஷ்ட்ராவில் 54 பேருக்‍கும், தெலங்கானாவில் 24 பேருக்‍கும், கர்நாடகாவில் 19 பேருக்‍கும், ராஜஸ்தானில் 18 பேருக்‍கும் ஒமைக்‍ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் ஒமைக்‍ரான் நிலவரம் குறித்தும், தடுப்பு நடவடிக்‍கைகள் குறித்தும் பிரதமர் திரு. மோடி, டெல்லியில் நாளை முக்‍கிய ஆலோசனை நடத்துகிறார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் இத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாமா? இதோ முழு தகவல்..!
Back to top button
error: