மாவட்டம்தமிழ்நாடு

தண்ணீர் சூடா இருக்கா? என பார்த்த நர்ஸ் மின்சாரம் தாக்கி பலி..

சென்னை புதுவண்ணாரப்பேட்டை அம்மணி அம்மன் தோட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகள் அனிதா (வயது 20). இவர், சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.நேற்று காலை அனிதாவின் தாயார், டீ வாங்க கடைக்கு சென்றுவிட்டார்.

வீட்டில் தனியாக இருந்த அனிதா, குளிப்பதற்காக சுடுதண்ணீர் போடுவதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து அதில் ஹீட்டரை போட்டு வைத்து இருந்தார். பின்னர் தண்ணீர் சூடாகி விட்டதா? என்று தொட்டுப்பார்த்த போது மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

Back to top button
error: Content is protected !!