தமிழ்நாடுமாவட்டம்

அடுத்த 3 மணிநேரம் – இந்த 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் அடுத்த 3 முதல் 6 மணிநேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பினை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.

வானிலை அறிக்கை:

கடந்த டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை, அடுத்தடுத்த புயல்கள் என கனமழை, வெள்ளப்பெருக்கு தமிழகத்தையே புரட்டிப்போட்டது. இருப்பினும் அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் புத்தாண்டு தொடக்கத்தில் சீராக இருந்த வானிலை தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

7167rain

தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையின்படி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தீவிரமடைந்த காரணத்தால் அடுத்த 3 முதல் 6 மணிநேரத்திற்குள் 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த மாவட்டங்கள் நெல்லை, மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் ஆகும்.

Back to top button
error: Content is protected !!