தமிழ்நாடு

நாளை பதவிப் பிரமாணம்.. சென்னை வந்தடைந்த புதிய ஆளுநர்!

தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை வந்தடைந்தார்.

முன்பு தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் தற்போது பஞ்சாபின் ஆளுநராக உள்ளார்.

இந்த நிலையில், நாகாலாந்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் நாளை ( செப்.,18ம் தேதி) தமிழகத்தின் 25வது கவர்னராக தமிழக தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி இதற்காக சென்னை வந்தடைந்தார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் கே.என்.நேரு ஆகியோர் வரவேற்றனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ஆசிரியர், மாணவர்கள் இந்த அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வர அனுமதி இல்லை!!
Back to top button
error: