கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, இரண்டாம் தவணையாக தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது.
இந்தியாவில் கொரோனாவைத் தடுக்க முன்களப் பணியாளர்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போடும் இயக்கம் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. முதல் முறை தடுப்பூசி போட்டவர்கள் அடுத்த 28-வது நாளில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 484 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல் தவணையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட 3 ஆயிரத்து 126 பேருக்கு, இன்று முதல், இரண்டாவது தவணைத் தடுப்பூசி போடப்படுகிறது.