இந்தியா

‘ஒமைக்ரான்’; 80 சதவீதம் அறிகுறி இல்லை என அமைச்சர் பதில்..!

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட 161 பேரில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் பதில் அளித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவிலும் நுழைந்த ஒமைக்ரான் தற்போது நாளுக்கு நாள் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. இதுவரை நாட்டில் ஒமைக்ரானால் 200 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ‘ஒமைக்ரான்’ குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட 161 பேரில் 80% பேருக்கு அறிகுறியே இல்லை. இதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மாதத்துக்கு 31 கோடி டோஸ் என இருக்கும் தடுப்பூசி உற்பத்தியை 45 கோடி டோஸாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” எனக் கூறினார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: