தமிழ்நாடுமாவட்டம்

அரசு பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வழக்கு.. முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு..!

செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக உள்ள முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் பெற்றோர் ஆசிரியர் சங்க இணைப்பு கட்டணமான 50 ரூபாயை தவிர கூடுதல் கட்டணம் எதையும் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது
கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், மீறி செயல்பட்டால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி, சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் வைக்க உத்தரவிட்டார். மேலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என, பள்ளிகளில் ஆய்வு நடத்தி, பள்ளி கல்வி ஆணையருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் நீதிபதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பள்ளி கல்வி ஆணையர், வரும் 27ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை தள்ளி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: