உலகம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு..!

பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் நேற்று இரவு 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லையில் 100 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கைபர் பக்துன்க்வாவின் பெஷாவர், மன்ஷேரா, பாலகோட் மற்றும் சர்சாடா மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எங்கும் உயிர்ச் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: